குமரியில் தொடர் மழையால் களையிழந்த தாேவாளை மலர் சந்தை

குமரியில் தொடர் மழையால் களையிழந்த தாேவாளை மலர் சந்தை
X
குமரியில் பெய்து வரும் கனமழையால் புகழ்பெற்ற தோவாளை மலர் சந்தை விற்பனையின்றி களை இழந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை பூக்கள் விற்பனைக்கு தமிழகம் மற்றும் கேரளா அளவில் மிகவும் புகழ் வாய்ந்தது.

இங்கு மதுரை, ஓசூர், திண்டுக்கல் மற்றும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும். இதைப்போல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் குமாரபுரம், தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விடிய விடிய இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

தொடர் மழை காரணமாக பொதுமக்களும் உள்ளூர் பூ வியாபாரிகளும் பூக்கள் வாங்க வராத காரணத்தால் பூக்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!