போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவிகள் பேரணி நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் தற்போது குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஹரிகிரன் பிரசாத் இதற்கென பிரத்தியேக காவல்துறை ஆலோசனை வழங்கும் செல்போன் நம்பரை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் போதை பொருட்கள் விற்பனை தடுக்க உதவுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இன்று காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவுக்கிணங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர் கலந்து கொண்ட போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாகவும் அதை பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபடும் விதமாகவும், இதனால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக் கூறும் விதமாகவும், மாணவ மாணவிகளின் பேரணி நடைப்பெற்றது.
இதில் காவல் துறை வழங்கிய செல்போன் எண் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் கையில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஏற்பாடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்கள் மூலமாக நடத்தப்பட்டது,குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும் அந்தந்த பள்ளி பகுதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu