குமரியில் பள்ளி வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள்

குமரியில் பள்ளி வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள்
X

கோட்டார் பகுதியில் உள்ள குமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

குமரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள குமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி, மலர் கொடுத்து இன்முகத்தோடு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களை வரவேற்றனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவியருக்கும், பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்