திருட்டுத்தனமாக மதுவிற்பனை: ஒருவர் கைது, மதுபாட்டில்கள் பறிமுதல்

திருட்டுத்தனமாக மதுவிற்பனை: ஒருவர் கைது, மதுபாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள். 

குமரியில் திருட்டு மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமனாதிச்சன்புதூர் பகுதியில் திருட்டுத் தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த ராஜப்பா(50) என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்து 43 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு