குமரியில் குடியரசு தின விழா : காவல்துறையினர் சிறப்பிக்கப்பட்டனர்
கன்னியாகுமரியில் நடந்த குடியரசு தின விழாவில் போலீசாரின் அணி வகுப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தேசிய கொடியேற்றினார்.
அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பல காவல் அதிகாரிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனிடையே மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, கஞ்சா, சைபர் வழக்குகள் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குண்டர் சட்டம், நன்னடத்தை பிணை பெறுதல் ஆகியவற்றில் சிறப்பாக மேற்கொண்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள்.
கொலை, கொள்ளை, கஞ்சா, குட்கா வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து,பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய தனிப்படை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள்.
கொரோனா பேரிடரில் முன்கள பணியாளர்களாய் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள். மழை வெள்ளத்தின் போது மக்களின் உயிரினையும், உடைமையினையும் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பாற்றிய காவலர்கள்.
நீதிமன்ற நடைமுறை சம்பந்தப்பட்ட பணிகளில் திறம்பட செயலாற்றிய காவலர்கள். குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நன்னடத்தை பிணை பெறுவதற்கு சிறப்பாக பங்களிப்பாற்றிய காவலர்கள்.
போக்சோ வழக்குகளில் மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கைகளை விரைந்து பெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்த காவலர்கள். போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து காவலர்கள்.
காவல்துறையினருக்கு போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதிலும், கொரோனா பேரிடர் காலங்களில் உதவியாக இருந்த ஊர்காவல் படையினர். ஆகியோரை பாராட்டி அவர்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu