குமரியில் ரமலான் கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

குமரியில் ரமலான் கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
X

நாகர்கோவிலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

குமரியில் புத்தாடை உடுத்தி வாழ்த்துக்களை பரிமாறி ரமலான் கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

பெருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், பொது இடங்களில் கூடிய இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி தொழுகையில் ஈடுபட்டதோடு இனிப்புகள் வழங்கியும் ஒருவரையொருவர் கட்டி தழுவியும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நாகர்கோவில் இளங்கடையில் உள்ள புகழ் பெற்ற பாவாகாசிம் பள்ளி வாசலின் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது, இதில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்ததோடு, சிறுவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

Tags

Next Story