சரக்கு துறைமுகம் வந்தால் ராஜினாமா - தளவாய்சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு துறைமுகம் வந்தால் ராஜினாமா செய்வேன் என அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான தளவாய்சுந்தரம் சின்னமுட்டம், கன்னியாகுமரி, புதுக்கிராமம், வாவத்துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மீனவ மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட அவரிடம் கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமையாது என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார், தேர்தலுக்கு பின்னர் துறைமுகம் அமைக்கும் பணியை மேற்கொண்டால் யாரிடம் கேட்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வேட்பாளர் தளவாய் சுந்தரம், முதல்வர் ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான் என்றும் கொடுத்த வாக்குறுதியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காதவர் தான் நம் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி என கூறினார். மேலும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரக்கு பெட்டக துறைமுகம் வராது . ஒருவேளை வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.மேலும் எனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வேன் என கூறினார். தளவாய் சுந்தரத்தின் இந்த பதிலை கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் நிச்சயம் அதிமுகவிற்கு மட்டுமே வாக்களிப்போம் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu