தீபாவளி தொடர் விடுமுறை: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தீபாவளி தொடர் விடுமுறை:  குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
X

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை

தீபாவளியுடன் தொடர் விடுமுறையை தொடந்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள இயற்கை காட்சிகள் மற்றும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.சீசன் காலங்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

கடந்த பல மாதங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது கட்டுப்பாடுகள் இன்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை தொடர்ந்து இன்று கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதன்படி வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் கடற்கரைகளுக்கு சென்றும், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும், சொகுசுப் படகில் பயணம் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

மேலும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil