தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - சத்யபிரதா சாகு பங்கேற்பு

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு - சத்யபிரதா சாகு பங்கேற்பு
X

நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தமிழக அரசு முதன்மை செயலளரான சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார்.

குமரியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சத்யபிரதா சாகு பங்கேற்றார்.

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, 'எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை' என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தமிழக அரசு முதன்மை செயலளரான சத்யபிரதா சாகு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், அனைவரின் பாராட்டையும் பெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டைகள் எடுத்தவர்களின் எண்ணிக்கை முழுமையாகவில்லை என கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்