குமரி கால்வாயில் மர்மான முறையில் இறந்து கிடந்த மிளா: வனத்துறையினர் விசாரணை

குமரி கால்வாயில் மர்மான முறையில் இறந்து கிடந்த மிளா: வனத்துறையினர் விசாரணை
X

தோவாளை கால்வாயில் 10 வயது மதிக்கதக்க மிளா ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. 

குமரியில் கால்வாயில் இறந்த நிலையில் மிதந்து வந்த 10 வயது மிளா உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ஆரல்வாய்மொழி தோவாளை சீதப்பால் சுற்று வட்டார கிராமங்களில் வனப்பதியில் இருந்து காட்டு விலங்குகள் சட்ட விரோத வேட்டை காரர்களின் நடவடிக்கைகளால் வழிதவறி கிராமத்திற்குள் அடிக்கடி புகுந்து வருகிறது.

இதே போன்று வனப்பகுதியில் வனவிலங்குகள் மர்ம நபர்களால் வேட்டையாடப்படுவதும் அவர்களை வனத்துறையினர் பிடித்து தண்டனை விதிப்பதும் அடிக்கடி நடப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தோவாளை பகுதியில் செல்லும் தோவாளை கால்வாயில் 10 வயது மதிக்கதக்க மிளா ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பூதப்பாண்டி வனசரக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்வாயில் மிதந்து வந்த மிளாவின் உடலை ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்டனர்.

மேலும் மிளாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வனத்துறையினர் மிளா வேட்டைகாரர்களால் கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிளாவின் உடல் பிரேத பரிசோதனை முடிவில் தான் காரணம் குறித்து தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

குமரியில் மிளா, மான், முயல், காட்டுப்பன்றி மலைபாம்பு என வனவிலங்குகள் அடிக்கடி இறந்து வருவது வனவிலங்கு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!