புதிய தொழில்நுட்பத்திவ் குமரியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை:அமைச்சர் எ.வ வேலு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில் அந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, கன்னியாகுமரி மாவட்டம் வந்து, தேரேகால்புதூர் என்ற இடத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ள சாலையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுங்கச்சாவடிகளில் இனி இருக்காது என்று அறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளது என்பதை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கை கிடைத்தவுடன் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும், ஏற்கெனவே பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் 500 கிலோ மீட்டர் தூர சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது, தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பிற்காக மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் தமிழக அரசு இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக புதிய தொழில் நுட்பத்தை கையாளுவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைப்பதற்காக 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவைத்தவிர குற்றியார் - மோதிரமலை மற்றும் காளிகேசம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவதற்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu