கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி, பத்பநாபபுரம் ஆகிய 2 தொகுதிகளில் அதிமுகவும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பாஜக வும், கிள்ளியூர் தொகுதியில் தமாகவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளரும் கழக மாநில அமைப்பு செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக முப்பந்தல் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேட்பாளர் தளவாய் சுந்தரம் பூதப்பாண்டி பகுதியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சொர்ணராஜிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்களின் போது அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பச்சைமால் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai future project