போதையில் சாலையிலேயே படுத்து தூங்கிய குடிமகன்
நடுரோட்டில் போதையில் கிடந்த நபரை தூக்கி செல்லும் பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வேண்டுமென்றால் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பது அவசியம் என மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு அதன்படி 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான சான்றிதழ்களை காண்பவர்களுக்கு மட்டுமே மது வக்கீல்கள் கொடுக்கப்பட்டன. இரண்டு நாள் பரபரப்பு அடங்கியவுடன் அனைவருக்கும் கேட்கும் அனைவருக்கும் மக்கள் வழங்குவது வாடிக்கையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் அளவுக்கு அதிகமாக பதில் மது பாட்டில்களை வாங்கி குடித்த இளைஞர் ஒருவர் மது போதை மயக்கத்தில் அங்கு சுற்றி திரிந்தார். ஒரு கட்டத்தில் போதை அதிகமாகவே வடிவேலு பாணியில் நடுரோட்டில் படுத்து சுகமாக தூங்கினார்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இதனிடையே இதனை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் சாலையிலேயே அயர்ந்து தூங்கிய குடிமகனை தரதரவென இழுத்து சாலையின் ஓரத்தில் கொண்டு போட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu