காவல்துறை அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கும்பல்
வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்திய சோபன் பெயரில் போலியான முகநூல் முகவரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பெயரில் போலி முகநூல் தொடங்கி சில கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபட முயன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில் மீண்டும் காவல் உதவி ஆய்வாளர்கள் பெயரில் போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை போலீஸ் தோணியில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் பெயரில் போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சி நடைபெற்று உள்ளது. மேலும் பணம் பெற்றதாக உள்ள அடையாளங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்திய சோபன் பெயரில் போலியான முகநூல் முகவரி இருப்பதும் அதன் மூலம் பணம் பறிக்கும் முயற்சி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் பெயரில் முகநூல் தொடங்கி பணம் பறிக்கும் கும்பலின் செயல் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கும்பலை தேடி வருகின்றனர். அதேவேளையில் முகநூல் பெயரில் யாரும் பணம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என குமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu