கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் உணவகம் மூலம் உணவு - தளவாய்சுந்தரம்கோரிக்கை

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் உணவகம் மூலம் உணவு - தளவாய்சுந்தரம்கோரிக்கை
X

தளவாய் சுந்தரம்

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து ஆலோசனை நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து ஆலோசனை நடத்தினர்.

இதில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசும் போது குமரி மாவட்டத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உறுதுணையாக இருப்போம்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தங்கும் வசதி மற்றும் தரமான உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு சத்தான உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகளை அழைத்துப் பேசி உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கடந்த காலத்தில் கொரோணா முதல் அலையின் போது மேற்கூறிய நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்தது என அவர் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil