குமரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் மூடல்

குமரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் மூடல்
X

பைல் படம்

குமரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் நோய் தொற்று குறைந்ததால் மூடப்பட்டது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகரித்து வந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்காக, நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சை மையமாக உருவாக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சத்திலிருந்த கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து தற்போது மாவட்டத்தில் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 150 க்கும் கீழ் குறைந்ததால் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மூடப்பட்டது.

இதனிடையே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிற நோயாளிகளை அனுமதிப்பதா அல்லது மூன்றாவது அலைக்கு குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தெரியும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!