குமரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தியாக திருநாள்

குமரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தியாக திருநாள்
X

கன்னியாகுமரியில் பக்ரீத் தியாக திருநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சிறுமிகள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தியாக திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது, அதே வேளையில் வளைகுடா நாடுகளை தொடர்ந்து கேரளாவிலும் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் இஸ்லாமியத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!