அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பு
X

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அதிமுக கழக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் இன்று தொகுதிக்கு உட்பட்ட மணக்குடி, பள்ளம், பள்ளம் துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீனவ மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட அவரிடம் மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காத்தது அதிமுக அரசுதான் என கூறிய மீனவ பெண்கள் திமுகவினர் வாக்குகளை பெறுவதற்காக குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமையும் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், இதனை நாங்கள் நம்ப மாட்டோம் நாங்கள் நிச்சயம் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என தெரிவித்தனர். முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆரத்தழுவி வரவேற்ற பள்ளம் மீனவ கிராம பங்கு தந்தை தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஆசிர்வதித்தார். தொடர்ந்து மீனவ கிராம மக்கள் வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்