குமரிக்கு ரெட் அலர்ட் - கொட்டி தீர்க்கும் கனமழை

குமரிக்கு ரெட் அலர்ட் - கொட்டி தீர்க்கும் கனமழை
X

கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் குமரியில் கனமழை பெய்து வருகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது, வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது, மேலும் ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது, சுமார் 4 மணி நேரங்களை கடந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது 2700 கன அடி உபரி நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மழை தொடர்ந்தால் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil