அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து போஸ்டர்

அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து போஸ்டர்
X

இணையத்தில் வைரலாகும் போஸ்டர்.

குமரியில் மின் ஊழியர் திருமணத்தில் நண்பர்கள் வைத்த வரவேற்பு போஸ்டர் வைரல் ஆகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த மின் வாரிய ஊழியர் வினோஜி என்பவருக்கும், பட்டதாரி பெண் நிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களை வாழ்த்தும் விதத்தில் "இ.கே.எம் ராக்ஸ்" என்ற 2-கே கிட்ஸ் நண்பர் குழுவால் பிளக்ஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் திருமண தம்பதியை குறவன், குறத்தி போல் சித்தரித்து இரணியல் கோணத்தில் "மின் வெட்டு" ஓ சாமியோ....... அணில் பிடிக்கணுமா அணில்...! ஒரு அணிலுக்கு 100-ரூபாய் தான் சாமி என்று புதுப்பெண் கேட்பது போலவும், எண்ணோ, எக்கோ பீஸ் கட்டணுமா, ஒரு வீட்டிற்கு 200-ரூபாய் தான் என்று புது மாப்பிள்ளை கேட்பது போலவும், அதற்கு அட கொக்கமக்கா உலக மகா தொழில்டா என கவுண்டமணியின் காமெடி வரிகள் தொடங்கி, அது இல்லண்ணே எத்தனை வீட்டுல பீஸ் கட் பண்ணியிருப்பான் இப்ப அவனுக்கே பீஸ பிடுங்க ஒருத்தி வந்துட்டா என செந்தில் பதில் சொல்லும் காமெடி வரிகளும் இடம் பெற்றுள்ளது. இது தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருவதோடு இந்த போஸ்டரும் சமூக வலைதளங்கைளில் வைரலாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!