விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே

விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே
X
விவேக் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3 ஆம் தேதி ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் செய்தி குறிப்பது வெளியிட்டு உள்ளது.

அதில் இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் எண் 15906 திப்ரூகார்- கன்னியாகுமரி விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், திப்ரூகாரில் இருந்து பிப்ரவரி 26 ம் தேதி சனிக்கிழமை புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண் 15905 கன்னியாகுமரி- திப்ரூகார்- விவேக் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி வியாழக்கிழமை புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது, எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!