குமரி கோவில்களில் சித்திரை விஷு கோலாகலம்

குமரி கோவில்களில் சித்திரை விஷு கோலாகலம்
X
கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்திரை முதல் நாள் சித்திரை விஷு நாளாக கொண்டாடப்பட்டது

சித்திரைமுதல்நாள் விஷு நாளாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது, இந்நாளில் கனி காணுதல் மற்றும் கைநீட்டம் வாங்குதல் போன்றவை சிறப்பு பெற்றதாக அமைகிறது. காய்கனிகளை காணும் சிறியவர்களுக்கு பெரியவர்கள் பணம் வழங்குவார்கள், அப்படி கிடைக்கும் பணம் நிலைத்து நிற்கும் என்பதும் அந்த வருடம் முழுவதும் மங்களமும், குறைவில்லா செல்வமும் நீடிக்கும் என்பது நம்பிக்கை,

அதன் படி கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து கனிகளை தரிசனம் செய்தனர், தொடர்ந்து கோவிலில் பெரியவர்களிடம் இருந்து கைநீட்டம் பெற்று கொண்டனர்,

இதே போன்று பல்வேறு வீடுகளிலும் கனிகாணும் நிகழ்ச்சியும் கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags

Next Story
ai in future agriculture