விஜய் வசந்த் எம். பி. சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சந்திப்பு

விஜய் வசந்த் எம். பி. சுகாதார  அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சந்திப்பு
X

அமைச்சர் மா. சுப்பிரமணியனை விஜய் வசந்த் எம்.பி. சந்தித்து பேசினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை விஜய் வசந்த் எம்.பி. சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அமைச்சரிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து உக்ரைனில் நடைபெற்ற போர்ச்சூழல் காரணமாக தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு அவர்களது படிப்பை தொடர்வதற்கு வழிவகை செய்து தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவசரகதியில் மாணவர்கள் தாயகம் திரும்பியதால் அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து தங்களது சான்றிதழ்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகையால் அவர்களது சான்றிதழ் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அமைச்சரிடம் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!