குமரியில் நாளை காவல் துறையில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

குமரியில் நாளை காவல் துறையில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
X
குமரி மாவட்ட காவல் துறையில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள், நாளை பொது ஏலம் விடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டதில், காவல்துறையில் உபயோகப்படுத்தப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 26 இருச்சக்கர வாகனங்கள் என மொத்தம் 42 வாகனங்களை பொது ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி, நாளை 6 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் குறித்த சந்தேகங்களுக்கு ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணான 04652-261389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி