குமரியில் வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு; பல்வேறு இடங்களில் மரியாதை

குமரியில் வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு; பல்வேறு இடங்களில் மரியாதை
X

 கன்னியாகுமரி ஜீரோபாய்ன்ட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பாஜகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்ட குமரியின் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி ஜீரோபாய்ன்ட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பாஜகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று நாகர்கோவில், தக்கலை, பத்பநாபபுரம் உட்பட மாவட்டம் முழுவதும் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு