குமரியில் உரிமை கோராத 1,101 வாகனங்கள் ஜன. 11 முதல் 13 வரை ஏலம்
![குமரியில் உரிமை கோராத 1,101 வாகனங்கள் ஜன. 11 முதல் 13 வரை ஏலம் குமரியில் உரிமை கோராத 1,101 வாகனங்கள் ஜன. 11 முதல் 13 வரை ஏலம்](https://www.nativenews.in/h-upload/2022/01/07/1448741-videocapture20210330-232438.webp)
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்டு, யாரும் உரிமை கோராத 12 நான்கு சக்கர வாகனங்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 1081 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 1101 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஆதார் கார்டு, குடும்ப அட்டை நகலுடன் காப்பு தொகையாக ரூபாய் 1000 /- செலுத்தி ஜனவரி 10ஆம் தேதி காலை பத்து மணிக்குள் ரசீது பெற்று கொள்ள வேண்டும். அதன்படி விதிமுறைகளை பின்பற்றியவர்கள் ஜனவரி 11 முதல், 13 வரை நடைபெறுகின்ற ஏலத்தில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu