பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்
X
தனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் 25 வயதான லிபின். இவருக்கும் கீரிப்பாறை பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், அந்த பெண் லிபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த லிபின் நேற்று அந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண்அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்