டாஸ்மாக் பூட்டை உடைத்து ஒரே ஒரு சரக்கு பாட்டிலை மட்டும் எடுத்துச் சென்ற திருடன்

டாஸ்மாக் பூட்டை உடைத்து  ஒரே ஒரு சரக்கு பாட்டிலை மட்டும் எடுத்துச் சென்ற திருடன்
X

ஒரே ஒரு சரக்கு பாட்டிலை மட்டும் திருடிச் சென்ற அதிசிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரியில் டாஸ்மாக் பூட்டை உடைத்து தான் ஆசை பட்ட ஒரே ஒரு சரக்கு பாட்டிலை மட்டும் திருடி சென்ற அதிசிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது, இந்த கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பலமுறை குற்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

இதனிடையே சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து சென்ற பிறகு மது குடிக்க வந்த மது பிரியர் கடை அடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எப்படியும் மது குடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடையில் இருந்த ஒன்பது பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று தனக்குப் பிரியமான விலை உயர்ந்த ஒரே ஒரு மது பாட்டிலை மட்டும் எடுத்து சென்றுள்ளார்.

இக்கடையில் சூப்பர்வைசராக குமார் என்பவரும் சேல்ஸ்மேனாக ராஜேஷ் செந்தில்குமார் ஆகியோர் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவத்தை அறிந்த பணியாளர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் சாணி வைத்து மறைத்தது, தலையில் சாக்கு போட்டு மூடி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளது வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது