கன்னியாகுமரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா: விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில், கூட்டாலுமூடு தனியார் மண்டபத்தில் நடந்த தேசிய ஊட்டச்சத்து மாதவிழா
கன்னியாகுமரி மாவட்டம், முன்சிறை ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி ஆசிரியர்களை கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழா கூட்டாலுமூடு தனியார் மண்டபத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில், கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும், எடுத்து கொள்ள வேண்டிய தடுப்பூசி மருந்துகள் குறித்தும், குழந்தைகள் பிறந்த பின்பு, தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், வில்லிசை பாடல், நடனம் ஆகியவற்றின் மூலம், அங்கன்வாடி ஆசிரியர்கள் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், உணவு தானிய பொருட்கள் கொண்டு வண்ண கோலங்கள் வரைந்தும் காய்கறி, பழங்கள், மற்றும் கீரை வகைகளின் கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விளக்கமளித்தனர், இதில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்று சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu