காற்றின் காரணமாக திசை மாறிய குமரி மீனவர்கள் பத்திரமாக கரை சேர்ந்தனர்

காற்றின் காரணமாக திசை மாறிய  குமரி மீனவர்கள் பத்திரமாக  கரை சேர்ந்தனர்
X

 மீனவர்கள் 3 பேரும் பாதுகாப்பாக வந்ததை தொடர்ந்து மகிழ்ச்சியடைந்த  மீனவ கிராமங்கள்

குமரியில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறிய மீனவர்கள் 18 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக கரைக்கு வந்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த தாவீது( 65 ), அலெக்சாண்டர்( 60 ) ஜோசப் அருள்தாசன்( 62 ) ஆகிய மூன்று மீனவர்களும் பதிவு எண் இல்லாத நாட்டு படகில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

கரையில் இருந்து நான்கு நாட்டின்கல் தூரம் சென்று மீன் பிடிக்கும் இவர்கள் காலை 9 மணிக்குள் கரை திரும்புவது வழக்கம், ஆனால் காலை 9 மணிக்கு வரவேண்டியவர்கள் மாலை வரை கரை திரும்பாததால் அச்சம் அடைந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் மாயமான மீனவர்களை தேடி மேல மணக்குடி மீனவர்கள் 10 படகுகளில் கடலுக்கு சென்று தேடி சென்றனர், மேலும் இது குறித்த தகவல் கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் மீனவர்களை தேடினர்.இதன் காரணமாக மேல மணக்குடி மீனவ கிராம மக்கள் அச்சமும் சோகமும் அடைந்து இருந்த நிலையில் மாயமான மீனவர்கள் 3 பேரும் அதிகாலையில் தூத்தூர் மீனவ கிராமத்தில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

அப்போது கடலில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர், மீனவர்கள் 3 பேரும் பாதுகாப்பாக வந்ததை தொடர்ந்து சோகத்தில் இருந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story