குமரி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

குமரி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
X

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது.

கந்த சஷ்டி நிறைவு நாளை தொடர்ந்து குமரி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருக வழிபாடுகளில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவை சிறப்பாக கொண்டாடும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகராஜா கோவில், தோவாளை முருகன் கோயில் மருங்கூர் முருகன் கோவில் வெள்ளிமலை முருகன் கோயில் உட்பட பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக முருகன் கோவில்களில் காலை முதல் தொடங்கி நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேகம், ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்திற்கு பின்னர் தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

Tags

Next Story
ai healthcare products