குமரியில் கோடைமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.

குமரியில் கோடைமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.
X

கோடைமழையில் குளித்த மரங்கள்

ஒரு மாதமாக சுட்டெரித்த வெயிலின் வெப்பத்தை தணித்த கோடை மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் நீர் நிலை பகுதிகளிலும் மழை நீடித்ததால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்