பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த தெற்கு மண்டல காவல்துறை தலைவர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் கொடை விழாவின் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி பூஜை மற்றும் ஒடுக்கு பூஜை பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு I.P.S நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் உள்ள பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்களின் நண்பனாக பாதுகாப்பு பணியில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu