போதையில் ரோட்டில் வாகனத்துடன் தூங்கிய வியாபாரி - பரபரப்பு

போதையில் ரோட்டில் வாகனத்துடன்  தூங்கிய வியாபாரி - பரபரப்பு
X

மது போதையில் தூங்கியவர்  

குமரியில் முக்கிய சந்திப்பில், போதையில் நடுரோட்டில் சொகுசாக தூங்கிய ஆக்கர் வியாபாரியை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை புண்ணியம் பகுதியில், ஆக்கர் வியாபாரம் செய்துவருபவர் பைஜு, இவர் தினமும் காலையில் தனது ஆட்டோவில் வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் நேரம் வீட்டுக்கு சாப்பிட வருவது வழக்கம். வழக்கம் போல், இன்று காலை வேலைக்கு கிளம்பிய பைஜு, அருமனை சந்திப்பில் இருந்து மது வாங்கி அதனை ஆட்டோவில் வைத்து அருந்தி உள்ளார்.

சற்று நேரத்திலேயே, மது போதை தலைகேறிய அவர் செய்வதறியது ஆட்டோவை இயக்கி உள்ளார், ஒரு கட்டதில் தன்னால் அட்டோவை ஒட்ட முடியாமல் போகவே, அப்படியே நடுரோட்டில் நிறுத்தி விட்டு தூங்கிவிட்டார். முக்கிய சந்திப்பில் நடு ரோட்டில் ஆட்டோவில் அரைமணி நேரமாக தூங்கிய அவரை, பொதுமக்கள் எழுப்பினாலும் அவர் அசைந்து கூட கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து, பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் போதை ஆசாமி பைஜுவை எழுப்ப முயற்சித்த நிலையில், போலீசாரின் அனைத்து முயற்சிகளும் வீணாகின. சோடா மற்றும் தண்ணீர் கொண்டு முகத்தில் அடித்ததில் முழித்துக் கொண்ட பைஜு, தன் தவறை உணர்ந்தார், மேலும் காவல்துறையினர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags

Next Story