தொடர் கஞ்சா விற்பனை: குமரியில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

தொடர் கஞ்சா விற்பனை: குமரியில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
X
தொடர் கஞ்சா விற்பனை புகாரை தொடர்ந்து தனி அமைப்பு உருவாக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது குமரி மாவட்ட காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து குமரி காவல்துறையில் கஞ்சா ஒழிப்பு துறை உருக்காக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவுபடி உருவாக்கப்பட்டுள்ள இந்த கஞ்சா ஒழிப்புத்துறை எனும் தனி அமைப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு வாலிபர்கள் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா ஒழிப்பு துறை போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்து மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஆல்வின் 32, இரவிபுதூர்க்கடை பகுதியை சேர்ந்த அஜித் 26 என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story