கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்: பரபரப்பு

கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்: பரபரப்பு
X

குமரியில் உள்வாங்கிய கடல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின்னர், தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பது, உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, அலைகள் இன்றி குளம் போல காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் இன்று கடல் நீர் திடீர் என உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், மணல் திட்டுகள் வௌியே தொிந்தன. இது குறித்து மீனவர்கள் கூறும் போது பவுர்ணமி தினத்தையொட்டி, இவ்வாறு உள்வாங்கி இருக்கலாம் என கூறினர். மேலும் குமரியில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!