இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் அபேஸ்: 5 பேர் கும்பல் கைவரிசை

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் அபேஸ்: 5 பேர் கும்பல் கைவரிசை
X

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்காெண்டனர்.

குமரியில் இருசக்கர வாகனத்தின் இருந்த 2 லட்சம் ரூபாயை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தமத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் நிஷித் (32). இவர் நாகர்கோவிலில் உள்ள வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று அதனை தனது இரு சக்கர வாகனத்தின் இருக்கையின் அடிப்பக்கம் உள்ள பெட்டியில் வைத்திருந்தார்.

பின்னர் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள தனது கடைக்கு சென்று கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தி உள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் வெளியே வந்த அவர், வாகனத்தில் வைத்திருந்த பணத்தை தேடியபோது பணம் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிஷித்தின் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிஷித்தை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், கடைக்குள் சென்றது.

மேலும் நிஷித்தின் கவனத்தை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கொளளையர்கள் அங்கிருந்து எப்படி மாயமானார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் எந்த வாகனத்தை பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் அவர்கள் யார் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்து இரண்டு லட்ச ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்