கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகு  மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
X
குமரியில் கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகு மற்றும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி, என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியதாவது: தனது விசைப்படகில் கடந்த 22ஆம் தேதி 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அன்றைய தினம் இரவில் விசைப்படகு மீது பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதியது..இந்த விபத்தில் விசைப் படகில் சென்ற தொழிலாளர்கள் காயமடைந்தனர், மேலும் தனது விசைப்படகு பலத்த சேதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மற்ற படகுகள் உதவியுடன் தனது படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் விசைப்படகு சேதமடைந்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது இதனால் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.எனவே, விசைப் படகினை சரி செய்யவும், காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை கப்பல் உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story