குடியரசு தினத்தையொட்டி குமரியில் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது, அதற்கான முன்னேற்பாடுகள் தயாராகி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், மேலும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்ட பிறகே அவர்கள் ரயிலில் பயணிக்க ரயில்வே போலீசார் அனுமதிக்கின்றனர்.
இதே போன்று ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும் சரக்கு பொருட்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu