மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனம் - ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மழைநீர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த குமரி ஆட்சியர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தி பராமரிப்பது குறித்த அதிநவீன மின்னணு வீடியோ வாகன விழிப்புணர்வு பிரச்சாரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தொடங்கியது. அதன்படி, மின்னணு வீடியோ வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வடக்கிழக்கு பருவமழை பெய்து வருவதால், மழைநீரை சேகரித்து, நமது மாவட்டத்தின் நீர் ஆதாரத்தினை பெருக்கிட வேண்டும். அதே போன்று நிலத்தடி நீரை சேமிக்கவும், வெள்ள அபாய பேரிடர்களில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும் எனவும், ஆட்சியர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu