இந்து ஆலய வழிபாட்டிற்கு தடை - குமரியில் பாஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு

இந்து ஆலய வழிபாட்டிற்கு தடை - குமரியில் பாஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு
X
இந்து கோயில்களில் பக்தர்கள்  தரிசனம் செய்ய தடை விதித்த அரசை கண்டித்து கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பில்  போராட்டம் அறிவிப்பு.
குமரியில் இந்து கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து விசேஷ நாட்கள் வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முதலே எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்றுபவழிபட தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே இந்துக்களுக்கு மட்டும் ஆலய வழிபாட்டிற்க்கு தடைவீதிக்கும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை கண்டித்து குமரி மாவட்ட பா.ஜ.க சார்பில் நாளை 10 இடங்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை 03-08-21 மாலை ஜந்துமணியளவில் மாவட்டத்தில் பத்து இடங்களில் பாஜக முக்கியஸ்தர்கள் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என பாஜக மாவட்டத்தலைவர் தர்மராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai marketing future