குமரியில் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு ஆபாச படம்: வாலிபர் கைது

குமரியில் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு ஆபாச படம்: வாலிபர் கைது
X
குமரியில் சமூக வலைத்தளங்கள் மூலம் இளம் பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சாம்புறம் பனைநின்றவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகன் 25 வயதான சுரேஷ்.

எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் வாலிபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story