குமரி மாவட்டத்தில் அமைதியாக நடக்கும் வாக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.
சட்டமன்ற பொதுதேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 631 இடங்களில் மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் 620 துணை ராணுவத்தினர், 2200 போலீசார், மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் என சுமார் 5000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்கு சாவடிகளில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கையுறையும் வழங்கப்படுகின்றன.மேலும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu