குமரியில் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசார்: பொதுமக்கள் பாராட்டு

குமரியில் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசார்: பொதுமக்கள் பாராட்டு
X

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சேதமடைந்து காணப்படும் சாலைகள்.

விபத்துக்களை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீசாரே சாலையை சீரமைத்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைகள் சேதமடைந்து விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டது.

இதனை கண்ட அங்கு நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிரைஸ், வைஸ்குமார் மற்றும் தலைமை காவலர் குமார் ஆகியோர் ஜல்லி மற்றும் மண் ஆகியவற்றைக் கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு காணப்படும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

விபத்துக்களை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீசாரே சாலையை சீரமைத்து வருவது மாவட்ட மக்கள் மத்தியில் காவல்துறைக்கு வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!