பெண் தவறவிட்ட தங்கக்கொலுசு: போலீசில் ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்

பெண் தவறவிட்ட தங்கக்கொலுசு: போலீசில்  ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்
X
தவற விட்ட தங்கக்கொலுசை, உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையாளர் ஜெகதீஷ்.
கன்னியாகுமரியில், பெண் தவறவிட்ட தங்கக்கொலுசை எடுத்து ஒப்படைத்த நேர்மையாளரை, காவல்துறையினர் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் திங்கள் நகர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கீழே, 12 கிராம் தங்கக்கொலுசை கண்டு எடுத்தார்.

பின்பு அதனை, இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார், இது குறித்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் தங்கராஜ் விசாரணை மேற்கொண்டத்தில், அது மூத்தாருண்ணி பகுதியை சேர்ந்த அனுஜா என்பவருடையது என்று தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் தங்கக்கொலுசு ஒப்படைக்கப்பட்டதோடு, ஜெகதீசின் நேர்மையை பாராட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இரணியல் காவல் நிலையத்தில் வைத்து பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நேர்மையாளர் ஜெகதீசின் செயலை பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture