குமரியில் 3 பேருக்கு குண்டாஸ் - காவல்துறை நடவடிக்கை

குமரியில் 3 பேருக்கு குண்டாஸ் - காவல்துறை நடவடிக்கை
X
குமரியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை குண்டாஸ் வழக்கில் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் சில்லறை விலையில் மது விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடி காமராஜர் சாலை புதுகாலனியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25). இவர் மீதும் குலசேகரபுரம் சாலை குளம் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் (27), சதையா (22) ஆகியோர் மீதும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

மேலும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதையடுத்து போலீசார் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அய்யப்பன், மதுரைவீரன், சதையா ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார், 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and future of education