சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்

சாராயம் காய்ச்சி விற்றவரை கைது செய்த போலீசார்
X
சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் ஒற்றைபனை விளை, நெடுந்தட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை கண்டா போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் (31) என்பதும், அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி அதனை விற்பனை செய்ய சாராய ஊறல் போட்டு வைத்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்த போது வீட்டிலும் 40 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைத்து இருபிபதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு