/* */

குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

குமரியில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
X

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி,  சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அவ்வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பொருளுக்கு பழகிக் கொள்வதை தடுக்க என்ன செய்யவேண்டும், போதை பொருள்கள் பயன்படுத்துதல் சம்பந்தபட்ட தகவல்களை காவல்துறைக்கு அறிவித்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்களை மறைக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தல், குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்து கூறியும், நடைமுறைகள் ஆகியவற்றை பற்றி விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Updated On: 13 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்