ஆக்சிஜன் பிரச்சனையால் நோயாளிகள் கலக்கம்.

ஆக்சிஜன் பிரச்சனையால் நோயாளிகள் கலக்கம்.
X
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் பிரச்னை தலை தூக்கி உள்ளது.

அங்கு 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. இதில் தற்போது 8 ஆயிரம் லிட்டர்தான் உள்ளது. ஆனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதனால் இருப்பில் உள்ள ஆக்ஸிஜன் வேகமாக தீர்ந்துவிடுகிறது. கொரோனா வார்டில் உள்ள 50 சதவீத நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் விரைவாக தீர்ந்துவிடுகிறது.

நிலைமையை சமாளிக்க வெளிமாவட்டங்களில் இருந்து 2 நாளைக்கு ஒருமுறை அவசர தேவைக்காக 4 டன், 5 டன் என ஆக்ஸிஜன் பெற்று சமாளித்து வருகிறார்கள்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொந்தளிப்பதால் அது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களையும் கலக்கம் அடைய செய்து உள்ளது.

எனவே ஆக்ஸீஜன் தட்டுப்பாட்டினை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
the future of work and ai