கூடன்குளம் திட்ட செயல்பாட்டிற்கு ஜன.4 ல் எதிர்ப்பு நிச்சயம் - சுப.உதயகுமார்

கூடன்குளம் திட்ட செயல்பாட்டிற்கு ஜன.4 ல் எதிர்ப்பு நிச்சயம் - சுப.உதயகுமார்
X

அணுஉலை எதிர்ப்பு போராளியும் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனருமான சுப..உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கூடன்குளம் அணு உலை திட்ட செயல்பாட்டிற்கு ஜனவரி 4 ஆம் தேதி எதிர்ப்பு தெரிவிப்பது நிச்சயம் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் மேற்கொண்ட நேரம் முதல் தற்போது வரை அணுமின் நிலைய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த அணுஉலை எதிர்ப்பு போராளியும் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனருமான சுப .உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசு அறிவித்த படி கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் வருமானம் இன்றி அவர்கள் நோய் நொடியால் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வெளி மாநிலத்தவர்கள் அணுபவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வரும் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி எங்கள் எதிர்ப்பை நிச்சயமாக பதிவு செய்வோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!